மாணவர்கள் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி...!


மாணவர்களின் பாடசாலை வருகை 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் உள்ள சுமார் 400 ஆசிரியர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமிருந்தும் கல்வி அமைச்சிடம் இருந்தும் பெறப்பட்ட தரவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில மாகாணங்களில் வாரநாட்களில் திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் வெள்ளிக்கிழமை மாணவர்களின் வருகை வெகுவாக வீழ்ச்சியை பதிவு செய்கிறது.

குறிப்பாக வட மாகாணத்தில் திங்கட்கிழமை 81 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 76 சதவீதமாக குறைவடைகிறது.

தென் மாகாணத்தில் திங்கட்கிழமை 86 சதவீதமாக பதிவாகும் மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 79 சதவீதமாக வீழ்ச்சியடைகிறது.

இவ்வாறு 10 முதல் 15 சதவீதமாக மாணவர்களின் வருகை குறைவடைதல் அல்லது கற்றல் செயற்பாடுகளை கைவிடுதல் போன்ற நடவடிக்கைகள் மிகவும் மோசமான நிலைமையாகும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post