8 பில்லியனை தொடும் உலக மக்கள் தொகை...!


உலக மக்கள்தொகை வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு 8 பில்லியனை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதை அடுத்து உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை, மனிதர்கள் பூமியின் வளங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் ஆகியவை குறித்த அக்கறைகள் அதிகரித்துள்ளன.

பூமியின் மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த அதிகரிப்பு மெதுவடையும் என்றும் பிராந்திய ரீதியான ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

உலக மக்கள்தொகை வளர்ச்சி 1960களில் உச்சத்தைத் தொட்டது. 1962ஆம் ஆண்டுக்கும் 65ஆம் ஆண்டுக்கும் இடையே வருடாந்திர வளர்ச்சி மிக அதிகமாக 2.1 வீதம் இருந்தது.

2020ஆம் ஆண்டு அது ஒரு வீதத்துக்கும் கீழ் குறைந்தது. 2050ஆம் ஆண்டுக்குள் அது சுமார் 0.5 வீதத்துக்குக் குறையக்கூடும் என்று கூறப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post