ஏழு மாவட்டங்கள் தொடர்ந்தும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் ஆபத்தான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கண்டி மாவட்டத்தின் கங்காவத்தை கோரல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்கள் மண்சரிவு தொடர்பில் மிகவும் அவதானமான இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
மேலும் அந்த பகுதியில் வெளியேற்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Post a Comment