51 பேரைக் கொன்ற நியூசி.தாக்குதல்தாரி மேன்முறையீடு...!

நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்களில் 51 பேரை கொலை செய்த ஆடவர் தம் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

தம்மை வெள்ளையின மேலதிக்கவாதி என்று அடையாளப்படுத்திய 32 வயதான பிரென்டன் டரன்ட் மேன்முறையீடு செய்ததை நீதிமன்ற அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனினும் மேன்முறையீட்டு விசாரணைக்கான திகதி இன்னும் வழங்கப்படவில்லை.

முஸ்லிம் வழிபாட்டாளர்களை கொலை செய்தது மற்றும் கொலை செய்ய முயன்றதற்கு டரன்ட் மீது 2020இல் பிணை இல்லாத ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்று குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதற்குமான ஆயுள் தண்டனை வழங்கிய முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது.

அவுஸ்திரேலிய நாட்டவரான டரன்ட் 2017இல் கிறிஸ்சேர்ச்சுக்கு குடியேறிய நிலையில், 2019 மார்ச் 15 ஆம் திகதி துப்பாக்கிகளுடன் இரு பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வழக்கு விசாரணையில் டரன்ட் எந்த ஒரு வாக்குமூலமும் அளிக்கவில்லை என்பதோடு தம்மீதான அதிகபட்ச தண்டனையையும் நிராகரித்தார்.

Post a Comment

Previous Post Next Post