மேல் மாகாணத்தில் நாளாந்தம் வீண் விரயமாகும் உணவு 40 வீதத்தினால் குறைந்திருப்பதாக கழிவு பொருள் முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன் முகாமையாளர் நளின் மானப்பெரும இதுதொடர்பாக தெரிவிக்கையில், கொவிட் தொற்றுக்கு முன்னரான காலப்பகுதியிலும் பார்க்க தற்பொழுது கழிவு பொருட்கள் ஏனையவை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்ட மீள் சுழற்சிக்காக பயன்படுத்த கூடிய கழிவு பொருட்களிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சில இறக்குமதி பொருட்களுக்கு வரையறை விதிக்கப்பட்டதினால் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக மேல் மாகாண கழிவு பொருள் முகாமைத்துவ பணிப்பாளர் மானப்பெரும மேலும் தெரிவித்தார்.
Post a Comment