‘சிங்கம் 4’ படத்திற்காக மீண்டும் இணையும் ஹரி - சூர்யா கூட்டணி?


இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா கூட்டணி ‘சிங்கம் 4’ படத்திற்காக மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஹரி எப்போதும் ஆக்ஷன் கலந்த குடும்ப செண்டிமெண்ட் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான ‘தமிழ்’, ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’, ‘அய்யா’, ‘ஆறு’ உள்பட பலப் படங்கள் வெற்றிப்பெற்ற நிலையில், முன்னணி நடிகரான சூர்யாவுடன் இணைந்து கடந்த 2010-ம் ஆண்டு ‘சிங்கம்’ என்ற படத்தை இயக்கினார். நேர்மையான காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்திருந்த நிலையில், அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்புப் பெற்றதைத் தொடர்ந்து, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ‘சிங்கம் 2’ படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

image

இந்தப் படத்திற்கும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து அடுத்ததாக கடந்த 2017-ம் ஆண்டு ‘சிங்கம் 3’ வெளியானது. ஆனால் இந்தப் படம் சரிவர வரவேற்பு பெறவில்லை. இதையடுத்து ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் ‘அருவா’ என்றப் படம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டநிலையில் சில காரணங்களால் அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘யானை’ படத்தைத் தொடர்ந்து, மற்றொரு படத்திற்கான வேலையில் ஈடுபட்டுள்ளபோதும், ‘சிங்கம் 4’ படத்தின் கதை உருவாக்கத்தில் இயக்குநர் ஹரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழுக் கதை தயார் செய்ததும் சூர்யாவிடம் இயக்குநர் ஹரி கதை சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘சிங்கம் 4’ படத்தில் நடிக்க நடிகர் சூர்யாவும் ஆர்வமாக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தற்போது நடிகர் சூர்யா பாலாவின் ‘வணங்கான்’, சிறுத்தை சிவாவின் ‘சூர்யா 42’, வெற்றிமாறனின் ‘வாடி வாசல்’ ஆகியப் படங்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post