இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 39671 சுற்றிவளைப்புக்களில் சுமார் இரண்டு மெட்ரிக் தொன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இதன்போது 39428 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் 145 கிலோ ஹெரோயின், 370 கிலோ கொக்கெய்ன், 103 கிலோ ஐஸ் மற்றும் 38 கிலோ ஹஷிஸ் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .
சந்தேக நபர்களில் 6,345 பெண்கள் மற்றும் 1290 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
சுமார் 1,345 பேர் நாசகாரவேலை, புதையல் தோண்டுதல் மற்றும்வீடுகளை உடைத்தல் மற்றும் பெரிய அளவிலான கொள்ளைகளில் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் பாடசாலை மாணவிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 782 சந்தேக நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பலர் போதைப்பொருள் போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
எனவும் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக நாட்டுக்கேஇது பி[பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி...
வீரகேசரி
Post a Comment