'தி கேரளா ஸ்டோரி' டீசர் 32,000 சிறுமிகள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என கூறுகிறது.
சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் குத்துப்பாடலுக்கு ஆடியவர், இந்தி நடிகை அதா சர்மா. 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்துள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் டீசர் கடந்த 3-ந்தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
படத்தின் டீசிரில் பர்தா அணிந்த பெண் (நடிகை அதா ஷர்மா) ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற இந்துவாக தனது கடந்த காலத்தை விவரிக்கிறார். அவர் ஒரு செவிலியராக இருக்க விரும்பியதாக கூறுகிறார்.
இருப்பினும், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி ஆனார். அவர் பெயர் பாத்திமா என்றும் தான் தனியாக இல்லை என்றும் கூறுகிறார். இவரைப் போன்று சுமார் 32,000 சிறுமிகள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என கூறுகிறார்.
மேலும் கேரளாவில் சாதாரண பெண்கள் ஆபத்தான பயங்கரவாதிகளாக மாற்றும் ஒரு ஆபத்தான விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது, அதுவும் அனைவரின் கண்களுக்கு முன்னால்," என்று அவர் கூறுகிறார்.
இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தணிக்கைக் குழுவில் புகார் செய்யப்பட்டது. டீசரில் பர்தா அணிந்து தோன்றும் அதா சர்மா, தான் மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாதியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி பொய்யான தகவல்களை உண்மைபோல் முன் வைத்துள்ளதாகவும், கேரளாவை தவறாகச் சித்தரிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.
மேலும், இப்படத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹைடெக் செல் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு பிரிவினரின் மத உணர்வுகளை புண்படுத்துவது மற்றும் கலவரத்திற்கு அழைப்பு விடுப்பது போன்ற கருப்பொருள் படத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கேரளா டிஜிபி அனில்காந்த் திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனருக்கு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment