கனடாவிற்கு தஞ்சம் கோரிச் சென்ற 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு (08) 7 மணியளவில் வியட்நாம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு
மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாமில் உள்ள தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாட்நாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட அகதிகளுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் இவ்வாறு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத சூழ்நிலையிலேயே, தாம் கனடா நோக்கி அகதிகளாக செல்ல முயற்சித்ததாக மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்நாம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கை அகதிகள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
Post a Comment