2022 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வானிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஆட்டம் தடைபட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சாம் கரன் மற்றும் அடில் ரசீத் இருவரின் அபாரமான பந்துவீச்சில் 20 ஓவர்களில் வெறும் 137 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 32 ரன்கள் மற்றும் ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய சாம் கரன் மற்றும் அடில் ரசீத் இருவரும் தலா 3, 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அப்ரிடி, அலெக்ஸ் ஹேல்ஸை பவுல்டாக்கி பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை அளித்தாலும், ஒருபுறம் இங்கிலாந்து கேப்டன் பட்லர் பவுண்டரிகளாக அடித்தார். இருப்பினும் 26 ரன்கள் எடுத்த நிலையில் பட்லர் ருஃப் ஓவரில் ஆட்டமிழந்தார். 7 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 53 ரன்களை எடுத்து ஆடிவருகிறது இங்கிலாந்து அணி.
இந்நிலையில், போட்டி நடைபெறும் மெல்போர்ன் மைதானத்தில் மழை தூறி வருவதாகவும், அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி போட்டி தடைபட்டால் இறுதிபோட்டியில் ஒரு இன்னிங்க்ஸில் கட்டாயம் 10 ஓவர்கள் வீசவேண்டும் என்ற விதிப்படி போட்டி தள்ளி வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.
ஒரு வேளை 10 ஓவர்களை கடந்துவிட்டால் டிஎல் எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்படும். தொடர்ந்து மழை வந்தால் வெற்றி தோல்வி அதுவரையிலான ஆட்டத்தை பொறுத்து அறிவிக்கப்படும்.
Post a Comment