சூரியவெவ மஹவெலியார ஏரியில் 8 பேர் பயணித்த மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐவர் மீட்கப்பட்டுள்ளதோடு மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சூரியவெவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹவெலியார ஏரியில் 8 பேர் பயணித்த மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மரண சடங்கொன்றிற்காக பிஹிம்புவ மற்றும் குருணாகல் பகுதிகளில் இருந்து குழு ஒன்று வருகை தந்துள்ளது. இதன்போது இவர்கள் அனைவரும் சூரியவெவ, மஹவெலியார ஏரியில் அருகில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தபடும் சிறிய ரக படகு மூலம் பயணித்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த படகில் பயணித்த 8 பேரில் 3 பேர் நீரில் மூழ்கி உள்ளதாகவும் அவர்களில் ஐவர் பிரதேசவாசிகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இதன்போது நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் 10 முதல் 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் மூவரும் பெண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை இராணுவத்தினர், சூரியவெவ பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் உறவினர் வீடுகளுக்கு செல்பவர்கள் மற்றும் விசேட சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நீர்வீழ்ச்சிகள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நிலை நிலைகளுக்கு குளிக்கச் செல்லும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.(RJ)
Post a Comment