உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி...!


கால்பந்தாட்ட அரங்கில் முன்னாள் சம்பியனாக வலம் வரும் அர்ஜென்டீனா இவ்வருட தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

சவுதி அரேபியாவிற்கு எதிரான இன்றைய முதல் போட்டியில் அர்ஜென்டீனா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி பத்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோலடித்தார்.

முதல் பாதி ஆட்டம் அர்ஜென்டினாவிற்கு சார்பாக அமைந்தது.

எவ்வாறாயினும், இரண்டாம் பாதியில் அபாரமாக செயற்பட்ட சவுதி அரேபிய வீரர்கள் 48 மற்றும் 53 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை போட்டனர்.

நட்சத்திர வீரர்கள் பலரை உள்ளடக்கிய அர்ஜென்டின அணியால் இரண்டாம் பாதி முழுவதும் கோலடிக்க முடியவில்லை.

அதற்கமைய, போட்டியின் வெற்றி 2 – 1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வசமானது.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் C குழுவிற்கான அடுத்த போட்டியில் அர்ஜென்டின மெக்சிக்கோவுடன் மோதவுள்ளது.

Post a Comment

Previous Post Next Post