வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பிற்கான விவாதம் இன்று(15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடத்தப்படவுள்ளது.
நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதமான தெரிவுக்குழு விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி மாலை நடத்தப்பட்டதன் பின்னர் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அமுல்படுத்தப்படும்.
புதிய பொருளாதார செயற்பாடுகளின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நேற்று(14) பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
Post a Comment