வர்த்தக பண்ட ஏற்றுமதியின் வருவாய் 2022 ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதிக்குள் 11 பில்லியன் டொலரை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஏற்றுமதி அபிவிருத்திச் சபை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டின் தொடர்புடைய
காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் வருவாய் 9.33% வளர்ச்சியைக் காட்டுவதாக அந்த சபை மேலும் கூறுகிறது. 2021 முதல் 10 மாதங்களுக்கு இணைந்ததாக 2022 காலப் பகுதியில் 398,739 கோடி ரூபாய் (11,076 மில்லியன் அமெரிக்க டொலர்) பண்டங்கள் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளது.
கடந்த வருடம் முதல் 10 மாதங்களில் 10,130.83 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை பெற்றுள்ளதோடு இவ்வருடம் அக்கால பகுதியில் ஏற்றுமதி வருமானம் நூற்றுக்கு 9.33 வீத வளர்ச்சியை காட்டியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
Post a Comment