பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் 11,000 பேரை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பேக் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
இது மெட்டாவின் ஊழியர்களில் சுமார் 13 சதவீதமாகும்.
பேஸ்புக்கு, இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்களின் உரிமையாளராக மெட்டா நிறுவனம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க், அந்நிறுவனத்தின் 7,000 ஊழியர்களில் சுமார் 3,000 பேரை பணிநீக்கம் செய்வதற்கு முயற்சித்து வருவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், முன்னிலை சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான மெட்டா நிறுவனமும் 11,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Post a Comment