இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்திய கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் குறித்த 11 மீனவர்களும் 02 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலிங்கபட்டினம் கரைக்கு அருகே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
11 மீனவர்களும் மேலதிக விசாரணைகளுக்காக காக்கிநாடா கரையோர பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment