பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐந்து நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை எனத் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு, 103வது அரசமைப்பு திருத்த சட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்கிறது.
"இட ஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட எந்தவொரு பிரிவினருக்குமான உறுதியான நடவடிக்கை. எனவே, பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்பது அரசமைப்பை மீறாது.
பட்டியல் சாதிகள்/பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களை பொருளாதாரரீதியாக பின்தங்கி இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடுகளில் இருந்து விலக்குவது அரசமைப்பு ரீதியாக செல்லுபடியாகும்.
கிடைக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் 50% கூடுதலாக பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு என்பது அரசமைப்புப்படி செல்லுபடியாகும். ஏனெனில் உச்சவரம்பு என்பது நெகிழ்வானது, அது சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்," என்று நீதிபதி தினேஷ் மகேஷ்வரி கூறியுள்ளார்.
இருப்பினும், பெரும்பான்மையான தீர்ப்போடு நிதிபதி ரவிந்திர பட் உடன்படவில்லை.
இருப்பினும், பெரும்பான்மையான தீர்ப்போடு நிதிபதி ரவிந்திர பட் உடன்படவில்லை.
Post a Comment