பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களை தொழில்நுட்ப அமைச்சின் கீழ் பெயரிட்டு ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, பாதுகாப்பு அமைச்சர், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர், விவசாய அமைச்சர், கைத்தொழில் அமைச்சர், தொழில்நுட்ப அமைச்சர் ஆகியோரின் கீழ் வரும் ஒரு சில நிறுவனங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவானது, தொழில்நுட்ப அமைச்சின் கீழிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 22ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி மூலம், பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி...
தினகரன்
Post a Comment