2022 உலகக் கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்றில் இலங்கை அணி பங்குபற்றிய முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளால் அபாரமாக வெற்றி ஈட்டியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ஹொபார்ட்டில் இன்றையதினம் (23) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.
அயர்லாந்து அணி சார்பில் ஹரி டெக்டர் 45 (42) ஓட்டங்களையும், போல் ஸ்டேர்லிங் 34 (25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷண (2/19), வணிந்து ஹசரங்க (2/25) ஆகியோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதற்கமைய, 129 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 15 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்று அபார வெற்றியை பதிவு செய்தது.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் அடுத்தடுத்து 2ஆது அரைச் சதத்தை பெற்று ஆட்டமிழக்காமல் 68* (43) ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 31* (22) ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 31 (25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
அயர்லாந்து அணி சார்பில் கரத் டெலனி (1/28) ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அந்த வகையில், இலங்கை அணி 5 ஓவர்கள் (30 பந்துகள்) மீதமிருக்க 9 விக்கெட்டுகளால் வெற்றி ஈட்டியுள்ளது.
போட்டியின் நாயகனாக குசல் மெண்டிஸ் தெரிவானார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
Post a Comment