T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து தனுஷ்க நீக்கம்...!


இலங்கை அணியின் மற்றுமொரு வீரரும் இவ்வருட ரி20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் பிரபல வீரர் தனுஷ்க குணதிலகேவே இவ்வாறு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவிற்குப் பதிலாக அஷேன் பண்டாரவை அணிக்கு அழைப்பதற்கு ஐ.சி.சி போட்டித் தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post