T20 world cup - இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு...!


இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதி 12 அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று (16) ஆரம்பமானது.

இதன் முதலாவது போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி இலங்கை அணிக்கு 164 என்ற வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நமீபியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக ஜான் ஃப்ரைலிங்க் அதிகபட்சமாக 44 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Post a Comment

Previous Post Next Post