T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 12 சுற்றில் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் 104 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அபார வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்காவின் முதல் விக்கெட் 2 ஓட்டங்களில் வீழ்த்தப்பட்டது.
இரண்டாவது விக்கெட்டில் இணைந்த Rilee Rossouw மற்றும் Quinton de Kock ஆகியோர் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து ஓட்டங்களைக் குவித்தனர்.
Quinton de Kock 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 7 பௌண்டரிகளுடன் 63 ஓட்டங்களைப் பெற்றார்.
56 பந்துகளை எதிர்கொண்ட Rilee Rossouw 8 சிக்ஸர்கள் 7 பௌண்டரிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்றார்.
இம்முறை T20 உலகக்கிண்ண தொடரில் வீரர் ஒருவர் பூர்த்தி செய்த முதல் சதம் இதுவாகும்.
தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைக் குவித்தது.
கடின இலக்கான 206 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி வீரர்களால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியவில்லை.
ஆரம்பத்திலிருந்தே விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால், ஓட்டங்களைப் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
5 வீரர்கள் 2-க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன், Litton Das அதிகபட்சமாக 34 ஓட்டங்களைப் பெற்றார்.
பங்களாதேஷ் அணியால் 16.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 101 ஓட்டங்களையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
Anrich Nortje 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
Post a Comment