SLPP: கூட்டம் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில்…! புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில்…!


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கட்சிக் கூட்டம் 'சாம்பலில் இருந்து எழுவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை (27) புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறவுள்ளது.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மாற்றமடைந்ததன் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் முதலாவது கட்சி கூட்டம் கடந்த 8 ஆம் திகதி 'களுத்துறையில் இருந்து மீண்டும் ஒன்றிணைவோம்' என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுனவர்தனவின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது கூட்டம் கடந்த 16ஆம் திகதி நாவலபிட்டி நகரில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. நாவலபிட்டி நகரில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கமைய பொதுஜன பெரமுனவின் மூன்றாவது கூட்டம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் ஏற்பாட்டில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துவத்தில் இன்று புத்தளம் ஆரட்சிக்கட்டு பகுதியில் இடம்பெறவுள்ளது.இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post