கனடா முதலான வட அமெரிக்க நாடுகள் குறித்து கற்ற லண்டன் பல்கலை கல்லூரி பேராசிரியரான Tony McCulloch என்பவர், ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா பிரித்தானியா உறவு எப்படி இருக்கும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
முந்தைய பிரதமரான போரிஸ் ஜான்சன், நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை ஆகியவற்றில் பிரச்சினைகள் கொண்டவர் என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளைப் பொருத்தவரை, தெளிவான, நிலையான கொள்கைகள் கொண்டவர் அல்ல என்றே தோன்றுகிறது என்கிறார் Tony.
ஆனால், ரிஷியைப் போருத்தவரை, அவர் போரிஸ் ஜான்சனைவிட நேர்மையான அரசியல்வாதி என்ற பெயரைப் பெற்றிருக்கிறார் என்கிறார் அவர்.
இப்போது ரிஷி பிரதமராகியுள்ளதால், கனடாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்த வழிவகை ஏற்பட்டுள்ளது என்கிறார் Tony.
ஆனாலும், பொருளாதார பிரச்சினைகள் முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ரிஷி, அவற்றை சரி செய்யும் வகையிலான பட்ஜெட் கொள்கைகளை உருவாக்குவதன் மூலம் தன்னை நிரூபித்தாகவேண்டும் என்கிறார் அவர்.
இதற்கிடையில், அவர் சார்ந்த கட்சியினர் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால், அவர் எவ்வளவு சிறந்தவராக இருந்தாலும் அவரால் வெற்றிபெறமுடியாது என்று கூறும் Tony, அவர் ஜெயிக்கவேண்டும் என விரும்புகிறேன், காரணம், அவர் ஜெயிக்கவில்லையென்றால், விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்கிறார்.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
Post a Comment