ரஞ்சன் ராமநாயக்காவின் வெளிநாட்டு பயணத்தினை விமானநிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நேற்றிரவு ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு விமான நிலையம் சென்றுள்ளார் எனினும் குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அவரை அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை அனுபவித்த ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி நிபந்தனையுடனான பொதுமன்னிப்பை ஆகஸ்ட் மாதம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment