இரத்தினபுரி உட்பட மாவட்டத்தின் பல இடங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் களுகங்கையின் நீர் மட்டம் அதிகரித்துவருவதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் இரத்தினபுரி காரியாலய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
களுகங்கையின் கிளை ஆறுகள் உள்ள நீரேந்து பிரதேசங்களிலும் மழை தொடர்வதால் களுகங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் களுகங்கையின் எல்லைப்பகுதியான மில்லகந்த பகுதியில் நேற்று 7அடி 8அங்குலத்தில் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமை சாதாரண வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறி எனவும் இந்நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிவனொளிபாதமலை அடிவாரம் மற்றும் பலாபத்தல கிலீமலை பிரதேசங்களில் மழை பெய்வதால் இரத்தினபுரி பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment