இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோர் சர்வதேசந நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை எதிர்நோக்கும் பாரிய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடியுள்ளதாக சர்வதேசந நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த மாநாடு அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று ஆரம்பமாகியது.
இந்த முறை குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான இலங்கை சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment