நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, எஹலியகொட, எலபாத, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 09.00 மணி வரை குறித்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment