விவசாயிகளுக்கான செய்தி...!


பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும் போகத்திற்கு 150,000 மெற்றிக் தொன் யூரியாவை கொள்வனவு செய்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட டெண்டருக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த அனுமதி, யூரியா உரம் விநியோகிப்பதற்கான டெண்டரை சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதன்படி, 2022, 2023 பெரும் போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை குறிப்பிட்ட தினங்களுக்குள் இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

எவ்வாறாயினும், பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, அரிசி இறக்குமதியினால் உள்நாட்டு அரிசி வியாபாரி பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தற்போது பல அரிசி ஆலைகள் மூடப்பட்டு வருவதாக அதன் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post