போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கு எதாவது சில உத்திகளை பயன்படுத்துவது எளிதாக நடக்கக் கூடியதுதான். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த இந்த பெண் காவல்துறை அதிகாரிகள் மீது தேனீக்களை ஏவிய சம்பவம் நடந்திருக்கிறது.
மசசூசெட்ஸ் (Massachusetts) என்ற மாகாணத்தைச் சேர்ந்த 55 வயது பெண்மணி ரோரீ வுட். Longmeadow என்ற பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி வருகிறார் ரோரீ. இவர் மீது பலரும் இடையூறு விளைவிப்பதாகச் சொல்லி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில் ரோரீ தங்கியிருக்கும் வீட்டில் இருந்து காலி செய்யும் படி நோட்டீஸ் விடுத்தும் அவர் காலி செய்யாமல் இழுத்தடித்தும், தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான குடியிருப்பு நிர்வாகம் போலீசை நாடி புகார் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து நேரில் சென்று வீட்டை காலி செய்யும்படி பணிக்க ரோரீயை தேடிச் சென்றிருக்கிறார்கள் காவல்துறையினர். அப்போது காரில் வந்து இறங்கிய ரோரீயை இடைமறித்து அப்புறப்படுத்த காவல்துறையினர் முற்பட்டிருக்கிறார்கள்.
இதனால் கடுப்பான ரோரீ தான் கொண்டு வந்த தேனீ கூடுகளை திறந்துவிட்டு போலீசாரை கதிகலங்கச் செய்திருக்கிறார். இதுபோக, ரோரீ திறந்து விட்ட தேனீ அக்கம்பக்கத்தில் உள்ள பல இடங்களையும் சூழ்ந்ததால் பொதுமக்களை பீதியடையச் செய்திருக்கிறது. ஆனால் ரோரீயோ தேனீக்கள் தன்னை தாக்காமல் இருக்க Bee keeper suit-ஐ அணிந்திருந்ததால் தப்பித்தார்.
பின்னர் தேனீக்களை விரட்டியடித்ததும் வீட்டை காலி செய்யாமல் இருந்த ரோரீயை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான ஃபோட்டோக்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
Post a Comment