தென் கொரியாவின் தலைநகரான சியோலில் இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 27 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்தார். கண்டி, உடத்தலவின்ன, மடிகே பகுதியைச் சேர்ந்த மொஹமட் ஜினாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தென் கொரியாவில் 2 வருடங்களாக வேலை பார்த்து வந்த இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்டதை அடுத்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவர் மீண்டும் தென் கொரியாவுக்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று இடம்பெற்ற ஹெலோவீன் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்தார். (RJ)
நன்றி...
அததெரண
Post a Comment