கோலிவுட்டில் ராஜா ராணி மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமான அட்லீ குமார் விஜய் உடனான மூன்று படங்களை இயக்கியதை அடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்சியல் இயக்குநர்களில் ஒருவராகவும் இணைந்துவிட்டார். இதுபோக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானையே இயக்கும் அளவுக்கு அட்லீ உயர்ந்துவிட்டார்.
பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஷாருக்கானின் ஜவானில் தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். 2023 ஜூன் 2ல் படம் திரையில் வெளியாகும் என தகவலும் வெளியாகியிருக்கிறது.
இதனிடையே ஜவான் படத்துக்கு பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பி மீண்டும் விஜய்யை அட்லீ இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, ஷாருக் உடனான ஜவான் பட வேலைகள் முடிந்த பிறகு இந்தி திரையுலகின் மிக முக்கியமான உச்ச நட்சத்திரமான சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜவான் பட ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சல்மான் கானை சந்தித்து காமெடி படத்துக்கான கதையை அட்லீ கூறியிருக்கிறாராம். அட்லீயின் படங்களும் சல்மானுக்கு பிடித்து போகவே அவருடன் பணியாற்ற சம்மதம் தெரிவித்ததாக பாலிவுட் செய்திகள் மூலம் அறியப்படுகிறது.
விரைவில் சல்மான் - அட்லீ படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கப் போவதாகவும் தகவல் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment