பாடசாலை மாணவர்களின் போஷாக்கு திட்டத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்குரிய தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தேசிய போஷாக்கு நிதியத்திற்கான ஒத்துழைப்பை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தேசிய போஷாக்கு நிதியத்தின் ஒதுக்கீடுகளூடாக, பாடசாலை மாணவர்களின் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Post a Comment