தாமரைக் கோபுரத்திலிருந்து பாய்ந்து சாகசம் செய்ய சந்தர்ப்பம்....!


தாமரைக் கோபுரம் சிங்கபூரில் உள்ள கோ பங்கி நிறுவனத்துடன் முதன்முறையாக காலில் கயறு கட்டிக் கொண்டு குதிக்கும் பங்கி ஜம்ப் சாகசத்தை (bungee jumping) ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த பங்கி ஜம்ப் என்ற சாகசம் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்வுள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘கோ பங்கி’ நிறுவனம் தற்போது ஜப்பான், சீனா, நேபாளம் ஆகிய மூன்று நாடுகளில் பங்கி ஜம்பிங் சாகசத்தை செயல்படுத்தி வருகிறது.

கோ பங்கி மற்றும் பங்கி லங்காவின் பொது முகாமையாளர் டேவிட் ஹோரோடெஸ்னி, ஜப்பானில் 8 சாகச குதிப்பு தளங்கள் இருப்பதாகவும், ஜப்பானின் மிக உயரமான தளம் 216 மீற்றர் என்றும் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் 260 மீற்றர் உயரமுள்ள பங்கி தளத்தைக் கொண்டுள்ளது, இது உலகின் மிக உயரமான கண்ணாடிப் பாலத்தில் இருந்து இயங்குகிறது.

கோ பங்கி நிறுவனம் வருடத்திற்கு 50,000 க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக குதிக்க வைக்கிறது.

தாமரை கோபுரத்தில் தளத்தை அமைத்தவுடன் ஒரு நாளைக்கு 130 பேருக்கு சந்தர்ப்பம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் பகலில் 100 பேரையும் 30 பேரை இரவு வேளையிலும் குதிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரிய திட்டமாக இது அமையும் என டேவிட் தெரிவித்தார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post