பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட தேசிய சபையின் இரண்டாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் 06 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றது.
அதன் பிரகாரம் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால தேசிய கொள்கை மறுசீரமைப்புக்கான உப குழுவின் உறுப்பினர்களாக பவித்திரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரட்ண, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி ரகீம், பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், நாமல் ராஜபகஷ, ஜோன்ஸடன் பெர்னாண்டோ, அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால பொருளாதார ஸ்தீரத்தன்மைக்கான உப குழுவின் உறுப்பினர்களாக சிவநேசதுரை சந்திரகாந்தன், வஜிர அபேவர்தன, அசங்க நவரட்ண, ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், சம்பிக்க ரணவக்க, சிசிர ஜயக்கொடி, எம்.ராமேஷ்வரன், மனோ கணேசன், டிரான் அலஸ், நசீர் அகமட், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணை பிரேரணைக்கு அமைய நியமிக்கப்பட்ட தேசிய சபையின் இரண்டாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேறறு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த இரண்டு உப குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றது.
அத்துடன் இந்த உப குழுக்கள் இரண்டும் இன்று கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
Post a Comment