தீபாவளி கலக்கலாக திரையரங்குகளில் வெளியானது ப்ரின்ஸ் - சர்தார்...!



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள `ப்ரின்ஸ்’ மற்றும் கார்த்தி நடித்துள்ள `சர்தார்’ படங்கள் வெளியானது.

தீபாவளி என்றதுமே தீபாவளிக்கு வெளியாகும் படங்களும் முக்கியத்துவம் பெறும். இந்த முறை தீபாவளிப் பண்டிகையையொட்டி இரண்டு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `ப்ரின்ஸ்’ படம் இன்று அதிகாலை 5 மணி முதலே சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கியுள்ள `சர்தார்’ திரைப்படம் இன்று காலை 8 மணி முதல் திரையிடப்பட்டு வருகிறது.



இரண்டு படங்களுமே பெரிய நடிகர்களின் படம் என்பதால் இரண்டையும் பார்க்க ஆர்வத்துடன் ரசிகர்கள் வருகிறார்கள். இவை தவிர தெலுங்கில் வெங்கடேஷ் - விஷ்வாக் சென் நடித்துள்ள `ஓரி தேவுடா’, விஷ்ணு மஞ்சு நடித்துள்ள `ஜின்னா’, மலையாளத்தில் மோகன்லாலின் `மான்ஸ்டர்', நிவின் பாலியின் `படவெட்டு’, கன்னடத்தில் தனஞ்ஜெயா நடித்துள்ள 'ஹெட் புஷ்' மற்றும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படமான `ப்ளாக் ஆடம்’ ஆகிய படங்களும் இன்று வெளியாகியுள்ளது.



மேலும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பில் வைக்கப்பட்ட சிறப்புக் காட்சிகளுக்கான கோரிக்கைக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி வரை மட்டும் வழங்கப்படும் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதி இந்த முறை தீபாவளிக்குப் பிறகு மூன்று நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி அக்டோபர் 21ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை பல சிறப்புக் காட்சிகளை திரையிட உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post