நிதி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தனது வருமானம் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு எந்தவித வருமான வரியையும் வழங்கவில்லையென குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் குற்றமிழைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அதே வேளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் சிறைச்சாலை நீதிச்சபையின் முன்னிலையில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது தான் நிரபராதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்த குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணையை நவம்பர் மூன்றாம் திகதிக்கு ஒத்திபோடுமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடவடிக்கைகளுக்காக கொழும்பு உலக வர்த்தக மையத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஊழியர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
Post a Comment