சல்மான் ருஷ்டியின் ஒரு கண் பார்வை இழப்பு....!


நியூயோர்க் நகரில் கடந்த ஓகஸ்ட் மாதம் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் ஒரு கண்ணில் பார்வை இழந்திருப்பதோடு கை ஒன்றும் செயலிழந்துள்ளதாக அவரது முகவர் அன்ட்ரூ வெய்லி தெரிவித்துள்ளார். 

அவரது மார்புப் பகுதியில் சுமார் 15 காயங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத நிந்தனையில் ஈடுபட்டவர் என்று சில முஸ்லிம்கள் கருதும் சல்மான் ருஷ்டி, தனது 1988 ஆம் ஆண்டு நாவலுக்காக நீண்ட காலமாக உயிர் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வந்தவராவார்.

இந்நிலையில் பெயிஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த வெய்லி கூறியதாவது, “அவர் ஒரு கண்ணின் பார்வையை இழந்துள்ளார். கழுத்தில் மூன்று மோசமான காயங்களுக்கு உட்பட்டுள்ளார். கை நரம்புகள் வெட்டப்பட்டதால் ஒரு கை செயலிழந்துள்ளது” என்றார்.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh

Post a Comment

Previous Post Next Post