இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாம் தமிழர் கட்சி (என்டிகே) நிர்வாகியின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தியது.
சிவகங்கையில் உள்ள விக்னேஸ்வரன் என்பவரின் வீட்டிலேயே நேற்று (07) தேசிய புலனாய்வுக் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மன்னார் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாலைக்கு அருகில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பணியாற்றி வரும் 27 வயதுடைய விக்னேஸ்வரனுக்கு இயக்கத்தின் சில உறுப்பினர்களுடன் தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நன்றி...
அததெரண
Post a Comment