கொக்கெய்னிற்கு அடிமையானேன்- சுயசரிதையில் அக்ரம் அதிர்ச்சி தகவல்...!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் கொக்கெய்னிற்கு அடிமையாகி அதிலிருந்து மீள்வதற்கான தனது போராட்டம் குறித்து பாக்கிஸ்தான் ஜாம்பவான் வோசிம் அக்ரம் சுல்தான் ஒரு நினைவுக்குறிப்பு என்ற தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

18 வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய பின்னர் அக்ரம் 2003 இல் ஓய்வுபெற்றார் எனினும் பயிற்சிகள் வர்ணணைகளிற்காக அவர் தொடர்ந்தும் சர்வதேச பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

ஒய்வுபெற்ற பின்னரே கொக்கெய்னை பயன்படுத்தும் பழக்கம் ஆரம்பமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.



கிரிக்கெட் விளையாடியவேளை அதிரனலின் சுரந்தது ஒய்வுபெற்ற பின்னர் அதற்கு மாற்றீட்டை தேடியவேளை கொக்கெய்னைபயன்படுத்த தொடங்கினேன் எனது மனைவியின் மரணத்துடன் அதனை கைவிட்டேன் என அக்ரம் தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார்.

நான் என்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினேன் விருந்துபசாரங்களை விரும்பினேன் என அக்ரம் எழுதியுள்ளார்.

தென்னாசியாவின் புகழின் கலாச்சாரம் உங்களை மயக்ககூடியது உங்களை நேர்மை இழக்கச்செய்யக்கூடியது மனதை நுகர்வில் சிக்கவைக்ககூடியது என எழுதியுள்ள அக்ரம் ஒரே இரவில் உங்களால் பத்து களியாட்ட நிகழ்வுகள் விருந்துபசார நிகழ்வுகளிற்கு செல்ல முடியும் சிலர் அவ்வாறு செல்கின்றனர் என தெரிவித்துள்ளது.

இது என்னை பாதித்தது நான் தீமைகளால் பாதிக்கப்பட்டேன் எனவும் அக்ரம் எழுதியுள்ளார்.

எல்லாவற்றையும் விட மோசமாக நான் கொக்கெய்ன் பயன்படுத்த பழகினேன் இங்கிலாந்தில் ஒரு கேளி;க்கை நிகழ்வில் எனக்கு அது வழங்கப்பட்டது தீங்கற்ற முறையில் அது ஆரம்பமானது என எழுதியுள்ள அக்ரம் பின்னர் எனது கொக்கெய்ன் பாவனை அதிகரித்தது பாரதூரமாக மாறியது எனவும் எழுதியுள்ளார்

நான் செயற்படுவதற்கு அது அவசியம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன் எனவும் அவர் எழுதியுள்ளார்.

அது என்னை நிலையற்ற நிலைக்கு தள்ளியது, ஏமாற்றக்கூடியவனாக மாற்றியது, ஹ_மா ( மனைவி) அந்த நேரங்களில் தனித்திருந்தார், அவர் கராச்சிக்கு செல்ல வேண்டும் தனது பெற்றோருக்கு அருகில் செல்ல வேண்டும் என தெரிவிப்பார், நான் தயங்கினேன் அதற்கு களியாட்ட நிகழ்வுகள் குறித்த எனது ஆர்வமே காரணம் எனவும் அக்ரம் எழுதியுள்ளார்.

இறுதியில் ஹ_மா எனது நடவடிக்கையை கண்டுபிடித்தார்- பொக்கெட்டிலிருந்து ஒருதொகை கொக்கெய்னை எடுத்தார், உங்களிற்கு உதவி தேவை என்றாhர், நான் அதனை ஏற்றுக்கொண்டேன், ஏனென்றால் நான் நிலைமீறி சென்றுகொண்டிருந்தேன் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என அக்ரம் எழுதியுள்ளார்.



ஒரு சிறிய அளவு கொக்கெய்ன் ஒரு கிராமாக இரண்டு கிராமாக மாறியது என்னால் உறங்க முடியவில்லை,என்னால் உணவு உண்ணமுடியவில்லை,நான் எனது நீரிழிவு நோயை அலட்சியம் செய்தேன் இதனால் தலைவலியும் மனோநிலை மாற்றமும் ஏற்பட்டன எனஅக்ரம் எழுதியுள்ளார்.

நான் புனர்வாழ்விற்கு சென்றேன் அந்த அனுபவமும் துன்பமாக காணப்பட்டது - அந்த மருத்துவர் நோயாளிகளிற்கு சிசிச்சை அளிப்பதை விட அவர்களின் குடும்பத்தவர்களை பயன்படுத்தி பணம் கறப்பவர்,எனவும் அக்ரம் எழுதியுள்ளார்.

நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் எனது ஒரு பகுதி நான் அனுபவித்த அவமானத்தை பற்றி உள்ளே புகைந்துகொண்டிருந்தது,என் பெருமை காயப்பட்டது,என் வாழ்க்கை முறையின் மோகம் மாறாமல் இருந்தது என அக்ரம் எழுதியுள்ளார்.

சிறிது காலம் நான் விவகாரத்து குறித்து சிந்தித்தேன்,ஹ_மாவின் தினசரி கண்காணிப்பை தவிர்ப்பதற்காக நான் 2009 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளிற்கு செல்ல முயன்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனைவி உயிரிழந்து பின்னர்( 2009) இல் கொக்கெய்ன் பழக்கத்தை கைவிட்டதாக அக்ரம் எழுதியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post