மக்களை குழப்பி பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது...!


எமது நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் மக்களை குழப்பி பிரச்சினைகளை அதிகரிப்பதன் மூலம் மட்டும் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வுகாண முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ள அவர், மக்களை குழப்பி பிரச்சினைகளை விரிவுபடுத்துவதால் மாத்திரம் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாதென்றும் அதற்கு அது பதிலாக அமையாதென்றும் அவர் தெரிவித்துள்ளார். சிலாபம், ஆராச்சிக்கட்டுவ நகரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் வீடு அமைந்திருந்த இடத்தில் நேற்று நடைபெற்ற 'வன்முறைக்கு எதிரான மக்கள் பலம்' என்ற தொனிப்பொருளில் பொதுஜன பெரமுன புத்தளம் மாவட்ட கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி நாம் களுத்துறையிலிருந்து தொடங்கிய பயணத்தை நாவலப்பிட்டிக்குச் சென்று தற்போது ஆராச்சிக்கட்டுவை வரை வந்துள்ளோம். நாம் சென்ற அனைத்து இடங்களிலும் பொதுமக்களின் பாரிய வரவேற்பு எமக்குக் கிடைத்துள்ளது.

தேபோன்று எமது வேலைத்திட்டம் தொடர்பில் மக்களின் அர்ப்பணிப்பு பாராட்டவேண்டியது. நாம் எந்த சமயத்திலும் நாடு தொடர்பில் தன்னிச்சையாக எத்தகைய தவறான தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. இனியும் மேற்கொள்ளப் போவதில்லை. அதனால் மக்கள் யாரையும் குற்றவாளிகளாக குறிப்பிடமுடியாது. சிலர் எம்மை பரிகாசம் செய்கிறார்கள். 

அவ்வாறு அவர்கள் செய்வது எதையும் உன்னிப்பாக கவனித்து அல்ல. நாம் தடுப்பூசியை கொள்வனவு செய்து கொரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களைப் பாதுகாத்தோம். அதற்கு நாம் முன்னுரிமையளித்தோம் எனினும் அதனையடுத்து உருவாகியுள்ள பொருளாதார சவால்கள் இன்றும் எமக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post