நீதிமன்றத்தை அவமதித்தமை, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவை நீதிமன்றத்தில் அச்சுறுத்தியமை போன்ற குற்றங்களுக்காக தனியார் ஆசிரியர் ஒருவருக்கு 05 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பைவிதித்துள்ளது. 3,00,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் 03 மாத சிறைத்தண்டனை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்ட மாஅதிபருக்கு உத்தரவிட்டனர்.
குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த பிரதிவாதியான ஆசிரியருக்கெதிரான வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் நீதிமன்றத்திடம் குறித்த நபர் மன்னிப்புக் கோரினார்.
Post a Comment