மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை...!



சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.



முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து அவர் விடுபட்ட நிலையில், தொடர்ந்து அரசு பணிகளையும், கட்சி பணிகளையும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன்பின்னர், அவர் வீடு திரும்பினார்.

இதுதொடர்பாக, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுகு வலிக்காக இந்த பரிசோதனை நடந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post