"பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் கூட பார்ன் வீடியோ பாக்குறாங்க” - போப் ஆண்டவர் பேச்சு...!


உலகெங்கும் ஆபாச தளங்களை முடக்கச் சொல்லி தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டு வரும் நிலையில், கத்தோலிக்க சபையின் தலைவராக இருக்கும் போப் பிரான்ஸிஸ் ஆபாச படங்கள் தொடர்பாக பேசியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (அக்.,26) மொபைல் மற்றும் இணையதள பயன்பாடு குறித்து போப் பிரான்ஸிஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அப்போது, “இணைய உலகில் உலவும் ஆபாசப் படங்களால் தீமையும் அபாயமுமே விளைகிறது.

சாமானியர்கள் மட்டுமல்லாது பாதிரியார்கள், கன்னியாஸ்திரீகள் கூட பார்ன் தளங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். செல்ஃபோன், இணையம் போன்றவற்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வாழ்க்கையில் நன்மையை விளைவிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.



இவ்வாறு ஆபாச படங்களை பார்ப்போரு எதிராக தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகிறேன். பார்னோகிராஃபி குறித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் இப்படியான பார்ன் வீடியோக்கள் பார்ப்பதால் அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வந்து பலரது இதயத்தை சலனப்பட வைக்கிறது.

அரசுத்தரப்பில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் எவரும் தங்களுடைய செல்ஃபோனில் ஆபாச படங்களை வைத்திருக்க கூடாது. அப்போதுதான் சலனமில்லாமல் வாழமுடியும். ஏனெனில் ஆபாச படங்களை பார்ப்பது முற்றிலும் குற்றமாகும்” எனக் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post