சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்று வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நீண்ட கால வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment