மலையக ரயில் பாதையில் ஹட்டன் ரயில் நிலையத்தை அண்டிய பாதையில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் அந்த பாதையில் மூன்று மணிநேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஹட்டன் ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.
ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் குப்பைகள் அடங்கிய மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாகவே நானுஓயாவிலிருந்து ஹட்டன் வரை சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் என்ஜின் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் என்ஜின் குழாய் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்
Post a Comment