அமெரிக்காவை அச்சுறுத்தும் ட்ரோன் உற்பத்திக்கான ஈரான் - ரஷ்ய கூட்டு...!

ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தி விடயத்தில ரஷ்யாவுடன் ஈரான் வலுவாக கைகோர்ப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. 

ஈரானின் அணுசக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணுஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படுமென வொஷிங்டன் அச்சங்கள் இல்லாமில்லை.

2000களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெளிப்பாடானது சமாதானமற்ற பயன்பாடுகளை நோக்கமாக கொண்டு இருக்கலாம் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது.

வொஷிங்டன் சார்பான ஈரானிய அதிருப்தி குழு ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட வரையறுக்கப்படாத அணுசக்தி நடவடிக்கைகள் தொடர்பில் பகிரங்கமாக குற்றம்சாட்டிய பின்னர் 2003 ஆம் ஆண்டில் சர்வதேச அணுசக்தி அமைப்பால் விசாரணை நடத்தப்பட்டது.

ஈரான் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாhத்தையில் சுமுகமான தீர்வை நெருங்கிவிட்டாலும், அணு சக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்கான பேச்சுவாhத்தையில், ஈரானிடம் சில விடயங்களை ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்திருந்தது. அதற்கு ஈரானும் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியதோடு அதனை மேற்கத்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டு விட்டன.



அதையடுத்து, அமெரிக்காவின் முன்னாள் ஜானாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு அந்த ஒப்பந்தத்தை முறியடித்ததால் ஈரானுடன் சுமுகத் தீர்வை ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை. இதன் விளைவாகவே தற்போது, ஈரானிய ட்ரோன் தயாரிப்பும், ரஷ்யா- ஈரான் ஆழமான உறவும் வலுவடைய ஆரம்பித்துள்ளது.

அத்துடன் ஈரானின் சக்திவாய்ந்த புரட்சிகர காவலர்களின் இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்புச் சபையின் உயர் அதிகாரி ஆகியோர் ஆயுதங்களை வழங்குவது பற்றி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மொஸ்கோவிற்கு சென்றபோது ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே சோல்ஃபகர் உட்பட குறுகியதூர ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தமே அதுவாகும். ஈரான் ரஷ்யாவுக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட ட்ரோன்களில் ஒன்று ஷாஹெட்-136 ஆகும், இது டெல்டா-சிறகுகள் கொண்ட ஆயுதம் ‘காமிகேஸ்’ ஆகாயத்திலிருந்து மேற்பரப்பு தாக்குதல் விமானமாகப் பயன்படுத்தப்படுகிறமை முக்கிய விடயமாகும்.

அதேநேரம், ரஷ்யா-ஈரான் இடையேயான உறவு என்பது ஆழ்ந்த கொள்கை பிடிப்பு அடிப்படையிலானது என்பதை விட, சூழ்நிலைகளை சார்ந்தே அமைந்துள்ளது. சிரியா போரிலும், இஸ்ரேலுடனான ரஷ்ய உறவுகளும் ஈரான் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளது. ஆயினும் தற்போதய உக்ரேனிய போரில் ரஷ்யாவிற்கு குறுகிய தூர ஏவுகணைகளை ஈரான் வழங்குகிறது.

அத்துடன் குயவநா-110 மற்றும் ணுழடகயபாயச ஆகியவை 300 முதல் 700 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஈரானிய குறுகியதூர (மேற்பரப்பு முதல் மேற்பரப்பு வரையிலான) பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.

சமீபத்திய வாரங்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்ய தாக்குதல்களை உக்ரேன் தலைநகர் கீவ்வில் நடாத்தியது. ஈரானிய ட்ரோன்களால் உக்ரேனிய அரசை அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், உக்ரேனின் மின்சாரம் தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் கட்டமைப்பின் மீது தாக்குதல் தீவிரமாக நடத்தாப்பட்டது. ஆயினும் கிரெம்ளின் அதன் படைகள் ஈரானிய ஆளில்லா விமானங்களை உக்ரேனைத் தாக்க பயன்படுத்தியதை மறுத்தது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் அணுசக்தி திட்டம் (ரேஉடநயச pசழபசயஅ ழக ஐசயn) என்பது பல ஆராய்ச்சி தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்ட யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவற்றை கொண்டதாகும்.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் சரிபார்ப்புக்கு உட்பட்டு அதன் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கியது. 1970 ஆம் ஆண்டில் ஈரான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை ஒப்புக்கொண்டது.

அமெரிக்காவின் உதவியுடன் 1950களில் சமாதான திட்டத்திற்கான அணுக்களின் பகுதியாக ஈரானின் அணுசக்தி திட்டம் பல ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணுசக்தி மற்றும் யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவை அடங்கும், இதில் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளன.

ஈரான் அணுசக்தி திட்டத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அரசாங்கங்களின் பங்கு ஈரானின் ஷாவை கவிழ்த்த 1979ஈரானிய புரட்சி வரை தொடர்ந்தது.

1979புரட்சிக்குப் பின், ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒத்துழைப்பு மிகக் குறைக்கப்பட்டது. 1981இல் ஈரானிய அதிகாரிகள் நாட்டின் அணுசக்தி வளர்ச்சி தொடர வேண்டும் என்று முடிவு செய்தனர். 1980களின் பிற்பகுதியிலும், 1990களின் முற்பகுதியில் அர்ஜென்டினாவில் பிரான்ஸடன் பேச்சுவார்த்தைகள் நடந்ததோடு உடன்பாடுகளும் எட்டப்பட்டன.



1990களில் ரஷ்யா ஈரானுடனான கூட்டு ஆராய்ச்சி அமைப்பு ஒன்றை உருவாக்கியது, ஈரான் ரஷ்ய அணு வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப தகவலுடன் ஈரானுக்கு அளித்தது.

பின்னர் 2006இல், ஈரானின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்துடன் இணங்காததன் காரணமாக, ஐ.நா.பாதுகாப்பு சபை ஈரான் அதன் செறிவூட்டல் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கோரியது.

2007ஆம் ஆண்டில், 2003ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் ஈரான் ஒரு தீவிர அணு ஆயுதத் திட்டத்தை செயற்படுத்திவிட்டதாக ஐக்கிய நாடுகளின் தேசிய புலனாய்வு மதிப்பீடு அறிவித்தது.

நவம்பர் 2011இல் ஈரான் ஒரு அணு குண்டு தயாரிப்பதற்காக சோதனைகளை நடத்தி வருவதாக நம்பகமான ஆதாரங்கள் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர், ஈரானின் முதல் அணுசக்தி ஆலை, புஷெர்-1 அணு உலை, ரஷ்ய அரசாங்க நிறுவனமான ரோசாம்மின் பிரதான உதவியுடன் நிறைவு செய்யப்பட்டு 2011செப்டெம்பர் 12ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டின் இறுதியில் புஷெர் அணு சக்தி நிலையம் முழு திறனை அடைந்துவிடும் என்று ரஷ்ய பொறியியல் ஒப்பந்தம் ஆட்டம்நெர்கோபிராம் தெரிவித்தது.

2015ஆம் ஆண்டுக்குள், எண்ணெய் வருவாயில் இழப்புக்களைச் சந்தித்த ஈரான் அதன் அணுசக்தி திட்டத்துக்கான 100 பில்லியன் டொலர்களை செலவழித்தது. அத்துடன் சர்வதேச தடைகளை காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் இழந்தது.

2018ஆம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகத்தால் ஈரானில் அணுசக்தி தொடர்பான தடைகள் மீண்டும் அமுலாக்கப்பட்டது. தொடர்ந்து பல தடைகளை தாண்டி ஈரான் புதிய 360 மெகாவாட் அணுசக்தி ஆலையில் டார்கோவினில் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளது,



ஈரானின் அணு சக்தி வளர்ச்சியை அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கின்றது. பிராந்தியத்தில் ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படும் என்று வொஷிங்டன் கருதுகிறது.

இதேவேளை ரஷ்யாவுடன் ஆழமாக கைகோர்க்கும் ஈரானின் ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தியால் ஐரோப்பிய - உக்ரேனிய போர்க்களத்தில் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாதோ என்றும் அமெரிக்கா அஞ்சுகிறது.

Post a Comment

Previous Post Next Post