நுவரெலியா ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்த இளைஞர் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் 160 மில்லிகிராம் ஹெரோயின் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் .
சந்தேகநபர் நுவரெலியாவைச் சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Post a Comment