காலி வீதியின் ஒரு பகுதி வெலிகம பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் காரணமாகவே இந்த வீதி மூடப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன்படி, வெலிகம காலி வீதியின் கடற்கரை வீதியின் ஒரு பகுதி நாளை (28) இரவு 10:00 மணி முதல் திங்கட்கிழமை (31) காலை 6:00 மணி வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment