முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பை பேணும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மக்களின் ஆர்;ப்பாட்டங்களால் பதவியை இராஜினாமா செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வமாகவுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவாரா என்பது தெளிவாக தெரியவில்லை என ஆங்கில இணையத்தளம் தெரிவித்துள்ளது.
Post a Comment